ஒர் எழுத்தாளர்ஒரு எழுத்தாளர் தன் நோட்டுப் புத்தகத்தை எடுத்து பின் வருமாறு எழுதத் துவங்கினார்:

"சென்ற ஆண்டு எனக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதில் என் 'பித்தப்பை' நீக்கப்பட்டது. அதனால் நீண்ட விடுமுறையில் இருந்தேன்.

எனக்கு 60 வயதானது. அதனால் நான் 30 வருடங்கள் மிகவும் விரும்பிச் செய்த என் வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன்.

என் தந்தையார் மரணமடைந்தார்.

என் பிள்ளைக்கு கார் விபத்து ஏற்பட்டு தேர்வில் தேர்ச்சியடையவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் தேறினான். கார் மிகுந்த சேதமடைந்தது.

என்ன கொடுமை! சென்ற ஆண்டு எனக்கு மிகவும் மோசமான ஆண்டு" என்று வருத்தப்பட்டு எழுதினார்.

தன் கணவர் சோகத்துடன் இருப்பதைப் பார்த்த அவர் மனைவி அவர் எழுதிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார்.

அமைதியாக வெளியேறிய அவள், இன்னொரு காகிதத்துடன் உள்ளே வந்து அதை அவர் பக்கத்தில் வைத்துச் சென்றாள்.

கண்ணுற்ற அவர் அதை எடுத்து படித்தார். அதில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.

"சென்ற ஆண்டு அறுவைச் சிகிச்சையின் மூலம் என் பித்தப்பை நீக்கப்பட்டதால், நான் நீண்ட காலமாக அனுபவித்து வந்த வலியிலிருந்து விடுதலையடைந்தேன்.

பூரண நலத்துடன் எனக்கு 60 வயது முடிந்தது. நான் ஒய்வு பெற்றதால், இனி எழுதுவதற்கு அதிக நேரம் கிடைக்கும்.

என் தந்தையார், தன் 95 ஆவது வயதில் எந்த வியாதியிலும் துன்பப்படாமல், தூக்கதிலேயே அமைதியாக உயிர் நீத்தார்.

என் பிள்ளை விபத்துக்குள்ளாகி தன் காரை இழந்தாலும், எந்த பெரிய பாதிப்புமின்றி மறுவாழ்வு பெற்றான்.

சென்ற ஆண்டு எனக்கு ஒரு சிறந்த ஆண்டு!"

என்று எழுதப் பட்டிருந்தது.

ஆம், எல்லாவற்றிலும் நல்லதையே பார்ப்போம்! நேர்மறையாகச் சிந்திப்போம்!!
Also read this