HOME SOCIAL MEDIA STORIEStally erp9 training

ABOUT SOCIAL MEDIAபடித்ததில் பிடித்தது!

(சமூக வலைத்தளங்களிலிருந்து)


பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்று நீயூஸ் பேப்பர்ல படம் வந்தவங்களை மறுபடி நீங்க என்னைக்காவது எங்காவது பார்த்து இருக்கிங்களா?? கண்டிப்பா பார்த்து இருக்க முடியாது... இந்த பர்ஸ்ட் பெஞ்ச் கேஸ் எல்லாம் உருட்டி பெரட்டி ஒரு மெடிக்கல், இஞ்சினியரிங் முடித்து ஒரே ஒரு கார், ஒரே ஒரு வீடு, ஒரே ஒரு பொண்டாட்டி, ஒன்றிரண்டு குழந்தைகள்னு செட்டில் ஆகிடுவாங்க. வாழ்க்கையில் சாதித்தவங்க வரிசையில் நிற்பவங்க எல்லாம் ரொம்ப நடுத்தரமும் லாஸ்ட் பெஞ்சும்... அடி வாங்கி அடி வாங்கி, அசால்ட்டா எழுந்து நிப்பதும், வெற்றி பெறுவதும் நம்ம மிடில் கடைசி பெஞ்சும், மிடில் கிலாசும்தான் .... 100க்கு 99 வாங்குனா அழும் முதல் பெஞ்ச் மாணவன் ... சின்ன அடி வாங்கினதும் மூலைல முடங்கிக்குவான்.. ஐந்துலயும் அரியர்ஸ்டா.. லாஸ்ட் பெஞ்ச்டா.. எருமை மேய்க்கத்தான் லாய்க்கு என்ற பெயர் பெற்றவர்கள்தான் சொந்த தொழில் ஆரம்பித்து ஐம்பது, நூறு, ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வெற்றியாளராக சாதனையாளராக இருப்பர்.

அப்துல்கலாம்..
காமராஜர்,
எம்.ஜி.ஆர்,
டெண்டுல்கர்,
வைரமுத்து,
பில் கேட்ஸ்

இளையராஜா தொடங்கி ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின நம்மூர் மாரியப்பன் வரை ஏழ்மை, கஷ்டம், சாதாரண பள்ளி, சாதாரண வளர்ப்புகளில் வந்தவர்கள்தான் அதிக பட்ச சாதனைகள் படைத்திருக்கிறார்கள். சில்வர் ஸ்பூன் கேசுங்க எல்லாம் பெரும்பாலும் அப்பா சேர்த்து வைத்ததை கரைத்து கொண்டோ அல்லது பாதுகாத்து கொண்டோ இருப்பார்கள்.. அதுனால நான் சொல்ல வரது என்னனா, பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இது மிக கட்டாயம். அத்தியாவசியம். ஆனால் உங்க வரவுக்கு மிஞ்சின ஸ்கூல்ல படிச்சாதான் பசங்க முன்னுக்கு வருவாங்க என்று நினைப்பதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை. நல்ல பள்ளிகள் பிள்ளைகள் திறமையை ஊக்குவிக்கின்றன என்பது கொஞ்சம் உண்மையே.. ஆனால் ஒரு திறமையுள்ள குழ்ந்தை எந்த பள்ளியில் விட்டாலும் நல்லா படிக்கும் என்பது நிறைய நிறைய உண்மை... அதனால் தன் சக்திக்கு மிஞ்சி, கடன் பட்டு பெரிய பெரிய பள்ளிகளில் சேர்ப்பதை விட, உங்கள் சக்திக்கு எந்த பள்ளியில் சேர்க்க முடியுமோ அதில் சேருங்கள். பக்கத்து வீட்டு குழந்தை அங்கதான் படிக்குது, எதிர்த்த வீட்டு குழ்ந்தை இங்க படிக்குது.. அண்ணா பையன் தங்கச்சி பொண்ணு இங்க படிக்குறானு சேர்க்காமல், அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ கடன் படாமல் படிக்க வையுங்கள். குழந்தைகளுக்குள் இருக்கும் திறமையை ஊக்குவிக்கத்தான் படிப்பு. ஆனால் அப்படிப்பட்ட கல்வி திட்டம் நம்மிடம் இல்லை ... எழுத்தை விழுங்கி, வெள்ளைத்தாளில் வாந்தி எடுக்க சொல்லித்தரும் வேலையைத்தான் எல்லா பள்ளியும் செய்யுது.. அதை எந்த பள்ளி செய்தால் என்ன???வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. “கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” “கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். “ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான். அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது. “இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!” அவளுக்கு கண்கள் பனித்தன. அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான். நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226) பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.